ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு
ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு
ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 04, 2010 01:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில், சிறுத்தை தங்கும் இடத்தை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
செண்பக தோப்பு வனப்பகுதி அருகேயுள்ள விளை நிலங்களுக்கு சிறுத்தை வந்து சென்றது. வனப்பகுதிக்குள் மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைக்கப்பட உள்ள இடங்களை மாவட்ட வன காப்பாளர் ராஜூ தலைமையில் வன விலங்கு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆறுமுகம் உட்பட வனத்துறையினர் பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள வண்ணான் ஓடையில் அடர்ந்த மரங்களுக்கு நடுவே குகை போன்ற இடம் மற்றும் தண்ணீர் குடிக்க வந்த போது குட்டை அருகே சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்ததை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ரேஞ்சர் பழனிராஜ் கூறியதாவது: செண்பகதோப்பு வண்ணான் ஓடையில் மரங்களுக்கு நடுவே மணல் பரப்பில் தேங்கிய தண்ணீரை குடிக்க, சிறுத்தை வந்து சென்றதற்கான கால் தடயங்கள் கிடைத்துள்ளன. மணல் பாங்காக இருப்பதால் சிறுத்தைக்கு அந்த இடம் தங்குவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், கடந்த வாரம் செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தூக்கி சென்ற கன்று குட்டியின் குடல், அழுகிய நிலையில் பேச்சியம்மன் கோயில் பின்புறம் கிடந்தது. அதை நேற்று காணவில்லை. அதை சிறுத்தை தின்றிருக்கலாம், என்றார்.